தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புத்தகம் இல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்த தயாரா?' - நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி: புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாரா என இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

narayanasamy question, நாராயணசாமி கேள்வி
narayanasamy question

By

Published : Feb 6, 2020, 9:06 AM IST

இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 'நவீனகால கற்பித்தலில் பரிமாணம், சவால்கள், வாய்ப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

அப்போது, கல்வித்துறைச் செயலர் அன்பரசு தலைமையேற்று பேசிகையில், "புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் தரம் ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 6.8 விழுக்காடாகவும் பன்னிரெண்டாம் வகுப்பில் 11.8 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரியில் இரண்டு மாதிரி பள்ளிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது" என்றார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "சென்னையிலிருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரவுள்ளன. சிங்கப்பூர் நிறுவனம் சார்பில் பசுமை விமான நிலையம் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காகச் சேதுராப்பட்டியில் 300 ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருக்கிறது. புதுச்சேரியில் தொழில்நுட்ப பூங்கா கொண்டுவரும் எனது கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசுடனும் துணைநிலை ஆளுநரும் போராட வேண்டியுள்ளது. இதனால் எனக்கு உறக்கம் குறைந்துள்ளது.

விழாவில் பேசும் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி பட்ஜெட்டில் 8 விழுக்காடு ஆசிரியர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகள் தரமாக இருந்தால் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் ஏன் செல்கின்றனர்?

வளர்ந்துவரும் தொழில்நுட்பக் காலங்களில் மாணவர்களுக்குப் புதுச்சேரியில் ஐ-பேட் வாங்கித்தருகிறோம். புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாராக இருக்கிறீர்களா?" என்றார். விழாவில் அரசு புதுச்சேரி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : விஜய் பாடலால் கடுப்பான ரஜினி...

ABOUT THE AUTHOR

...view details