புதுச்சேரியில் மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள காமராஜ் நகர் வார்டு 10-ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் சரியாக பதியவில்லை என்ற பிரச்னை எழுந்ததையடுத்து அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்தானது அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய தேர்தல் அலுவலர் ஒருவரை தேர்தல் துறை பணி இடைநீக்கம் செய்தது.
புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு - puducherry
புதுச்சேரி: வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட காமராஜர் நகர் வாக்குச்சாவடி எண் 10வது வார்டில் வருகின்ற 12ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி
இந்நிலையில், காமராஜ் நகர் வார்டு 10-ல் உள்ள 952 வாக்காளர்களுக்கான மறுவாக்குப்பதிவு மே 12 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் என்று தேர்தல் அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.