RCEP (பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு)இல் கையெழுத்திடுவது பிராந்தியத்தின் நலனுக்காகவும் இந்தியாவின் சொந்த பொருளாதார நலன்களுக்காகவும் இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் உயர்மட்ட தூதர் பீட்டர் வர்கீஸ் இன்று வாதிட்டார்.
டி.எஃப்.ஏ.டி. DFAT (வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை) முன்னாள் செயலாளரும் இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையருமான வர்கீஸ் ஆஸ்திரேலிய அரசின் இந்தியப் பொருளாதார ஆராய்ச்சி கட்டுரையை ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கையின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க இன்று சி.ஐ.ஐ. நடத்திய கருத்தரங்கில், இந்தியா எதிர்காலத்தில் RCEP இல் சேரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வர்கீஸ்.
"இந்த நேரத்தில் சர்வதேச பொருளாதாரத்தையும் வர்த்தக தாராளமயமாக்கல் தற்போது எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் பார்க்கும்போது உலகளாவிய உள்நாட்டு மொத்தஉற்பத்தி, உலக மக்கள்தொகை தலா மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு உடன்படிக்கை என்பது முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
இந்தியாவின் சொந்த பொருளாதார நலன்களைப் பொறுத்து நாம் பார்த்தால், ஒரு கட்டத்தில் வெளியே இருப்பதைவிட இந்த ஒப்பந்தத்திற்குள் வருவது சிறந்தது என்றே நான் கருதுகிறேன். ஆகவே, எதிர்காலத்தில் விரைவில், ஆர்.சி.இ.பி.க்குள் இந்தியாவையும் பார்க்க முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்” என்றார் வர்கீஸ்.
இந்தியா பல நாடுகளுடன் மேற்கொள்ளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து கேள்விக்கு, வர்த்தக தாராளமயமாக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வெவ்வேறு இலக்குகள் இருக்கும். இதில் இந்தியாவின் இலக்குகள் குறைவாகவே உள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இது பொருளாதாரத்திற்கு ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) 10 உறுப்பு நாடுகளுடனும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டின்போது முன்மொழியப்பட்ட RCEP ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.
"RCEP பேச்சுவார்த்தை நடைபெற்ற ஏழு ஆண்டில், உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழ்நிலைகள் உள்பட பல விஷயங்கள் மாறிவிட்டன. இந்த மாற்றங்களை நம்மால் கவனிக்க முடியாது. RCEP ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவம் RCEP இன் அடிப்படைகளையும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டும் கொள்கைகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.
இது இந்தியாவின் தற்போதைய பிரச்னைகளையும் சிக்கல்களையும் திருப்திகரமாக நிவர்த்தி செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவால் RCEP ஒப்பந்தத்தில் சேர முடியாது” என்று தாய்லாந்தில் பிரதமர் மோடி RCEPஇல் இருந்து விலகுவதற்கான முடிவை அறிவித்தார்.
RCEP-யை விட்டு இந்தியா வெளியேறியது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான FTA தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியாவுக்குக் கடினமான ஒன்றாக மாற்றுமா கேட்டதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் (பொருளாதாரப் பிரிவு) பி. ஹரிஷ், RCEP க்கு ஒப்புக்கொண்ட 15 உறுப்பு நாடுகளுடனும் இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருக்கும் அதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவுக்கு வர்த்தக உபரி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
2035ஆம் ஆண்டின்போது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம், வியாபாரம், முதலீட்டு கூட்டுறவு ஆகியவற்றை முக்கியமான ஒன்றாக மாற்றுவதற்கான ஒரு திட்டமாகவே 'இந்திய பொருளாதார யுக்தி' (India Economy Strategy) உள்ளது. வர்கீஸ் ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதிகளை இந்தியச் சந்தையில் அதிகரிப்பதற்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறினார்.
இதற்கிடையில், பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்திக்கும்போது, அதை நீக்க துறைவாரியாக மத்திய அரசு கவனமாக செயலாற்றிவருகிறது. சமீபத்தில் உதிரி பாகங்கள் (ஆட்டோமொபைல்), மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது போல. சுற்றுலா, வணிகத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நேரடி இணைப்பு இருக்க வேண்டிய அவசியத்தையும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இருதரப்பு பொருளாதார உறவை உயர்த்துவதற்கான முக்கிய துறைகளாக எரிசக்தி, ஃபின்டெக், அனிமேஷன் கேமிங், வங்கித் துறை, மருத்துவ தொழில்நுட்பம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
RCEP லிருந்து இந்தியா விலகுவது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா ஆஸ்திரேலிய முன்னாள் வெளியுறவு செயலர் பீட்டர் வர்கீஸுடன் கலந்துரையாடினார். அதில்,