தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோகலே இந்திய வங்கிகளிடம் பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பட்டியலைக் கேட்டிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, "அதிகளவில் வங்கிக் கடன் மோசடி செய்த நபர்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கூறினேன். அதற்குப் பதிலளிக்க நிதியமைச்சர் மறுத்துவிட்டார்.
தற்போது இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் நிறையப் பேர் உள்ளனர். இதனால்தான் நாடாளுமன்றத்தில் இது மறைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.