நாடு முழுக்க 21 நாள்கள் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், நிதி நிவாரணமாக இந்திய ரிசர்வ் வங்கி இ.எம்.ஐ. தவணைக் கடனை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைத்துள்ளது.
இது குறித்து ஹைதராபாத் ஐஐஆர்எம் (காப்பீடு, இடர்பாடு மேலாண்மை) கல்வி நிறுவன பேராசிரியர் முனைவர் கே. ஸ்ரீனிவாச ராவ் விவரிக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஏழாவது இரு மாத நாணயக் கொள்கை மதிப்பாய்வில், கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடும் வகையில் ரிசர்வ் வங்கி மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும்பொருட்டு நாணய, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகமாக உள்ளது. அதன் முதல்கட்டமாக ரெப்போ வட்டிவீதத்தை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.15 விழுக்காட்டில் இருந்து 4.4 விழுக்காடாக குறைத்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் கிடைக்கும்.
பணப்புழக்க ஆதரவு நடவடிக்கைகள்:
நியாயமான செலவில் வங்கிகளுக்கு நீடித்த பணப்புழக்கத்தை வழங்குவதற்காக பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை ஒரு ஆண்டு, மூன்று ஆண்டு குத்தகைதாரர்களுக்கு ரூ.1,25,000 ஆயிரம் கோடி தடையற்ற கட்டணம் மற்றும் தீர்வு முறையை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி அதன் தலையீட்டு முறையைத் தொடர்ந்தது.
அதேபோல் பண இருப்பு விகிதத்தின் சதவீதம் (சிஆர்ஆர்), வைப்புத்தொகைகளிலிருந்து ரிசர்வ் வங்கியுடன் வங்கிகள் வைக்க வேண்டிய பணம் ஆகியவற்றின் காரணமாக புதிய பணப்புழக்க வரவுகள் மற்றும் பணப்புழக்க முன்னுரிமைகள் மற்றும் நிதிகளின் தேவையை உணர்ந்து கொள்கிறது.
மேலும் கடன் வழங்கும் வங்கி நிதி நான்கு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடாக குறைக்கப்பட்டு ரூ.1,37,000 கோடியாக உள்ளது. அந்த வகையில் சட்டரீதியான பணப்புழக்க விகிதத்தின் (எஸ்.எல்.ஆர்) கீழ் உள்ள பத்திரங்களுக்கு எதிராக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கக்கூடிய விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) சதவீதம் இரண்டு விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம்:
தற்போதைய நெருக்கடியைப் பற்றிய ஒரு யதார்த்தமான மற்றும் நடைமுறைக் கண்ணோட்டத்தை எடுத்துக் கொண்டால், அனைத்து வங்கிகளும் வங்கிகளும் அல்லாத கடன்களை இப்போது இருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் மூன்று மாதங்களுக்கு தடை விதிக்க முடியும்.
இதனால் வங்கிக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் மாதாந்திர தவணைகளை (ஈ.எம்.ஐ) செலுத்தும் அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். மேலும் அவர்களின் கடமைகளை ஒத்திவைக்க முடியும்.