கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சில பொருளாதார ரீதியிலான பிரச்னைகளுக்குத் தற்காலிக தீர்க்கும்விதமாக இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு, இஎம்ஐ கட்டுவதிலிருந்து மூன்று மாதம் விலக்கு போன்றவை இடம்பெற்றிருந்தன.
ரிசர்வ் வங்கி அறிவிப்பிற்குப் பிரதமர் மோடி பாராட்டு இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மாபெரும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வங்கியின் அறிவிப்புகள் நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ரெப்போ வட்டிவிகிதம் 4.4 விழுக்காடாக குறைப்பு, 3 மாதத்திற்கு இஎம்ஐ இல்லை - ரிசர்வ் வங்கி