நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் பத்திரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதில், பங்குதாரராக உள்ள ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறோம்.
தேர்தல் பத்திரம் வழங்கும் விவகாரம்: நிதியமைச்சர் விளக்கம்! - நிதியமைச்சர் விளக்கம்
டெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதில் ரிசர்வ் வங்கி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

RBI had no objection to issuance of electoral bonds through SBI: Nirmala Sitharaman
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடும்வரை, தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தேர்தல் பத்திரம் வழங்குவதற்கு மறைமுகமாக ஒப்புக் கொள்ளப்பட்டது என்றார்.
இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!