நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
4ஆம் கட்ட வாக்குப்பதிவு: ஆர்பிஐ கவர்னர் வாக்களித்தார்! - rbi-governor voted in mumbai peddar road
மும்பை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கியதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வாக்களித்தார்.
4ஆம் கட்ட வாக்குப்பதிவு: ஆர்பிஐ கவர்னர் வாக்களித்தார்!
இதில் பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், மும்பை தொகுதியில் உள்ள பீடர் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பதிவுசெய்தார்.