டெல்லி:ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் ட்விட்டர் பதிவில், 'கரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோயின் அறிகுறிகள் எதுவும் பெரிதளவில் இல்லாததால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும், இங்கிருந்தே என் பணிகளைத் தொடர உள்ளேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.