பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது தரப்பினரும் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் கடந்த மே 13ஆம் தேதி சியான் மருத்துவமனையில் பிறந்த இரண்டு வாரமே ஆன நிலையில் ஆண் குழந்தை காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டது.
அப்போது பரிசோதனை மேற்கொண்டபோது அக்குழந்தைக்கு கரோனா தீநுண்மி இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நலம் தேறியது மட்டுமின்றி கரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்பட்டது.