இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறைகளுள் ஒன்றான தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் அண்மையில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற அதே வேகத்தில், 5ஜி தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்த 100 நாட்களுக்குள் 5ஜி ஏலம்... மத்திய அரசு தீவிரம்! - central minister
டெல்லி: ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 5ஜி ஏலத்தை அடுத்த 100 நாட்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசு தீவிரமாக முயன்றுவருகிறது.
ரவிசங்கர்
அதன்படி, 5ஜி சோதனை அடுத்த 100 நாட்களுக்குள் தொடங்கும் என்பதும், ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடைபெறும் என்பதும் தெரியவந்துள்ளது.
புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ரவிசங்கர் பிரசாத்தின் முயற்சி இந்தியாவை டிஜிட்டல் தளத்தில் அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்று கருதப்படுகிறது.