டெல்லி:பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் சிதம்பரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரகலாத் ஜோஷிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இந்தியாவில், 1652 தாய்மொழிகள் பேசப்படுவதாகவும், அதில் 22 மொழிகளை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.