தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரவிதாஸ் கோயில் இடிப்பு வழக்குக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அறிவுரை! - Ravidas Temple in Delhi

டெல்லி: ரவிதாஸ் கோயில் இடிப்பு வழக்கில் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலை மனுதாரர்கள் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Supreme Court

By

Published : Oct 4, 2019, 3:43 PM IST

நூற்றாண்டு பழமைவாய்ந்த ரவிதாஸ் கோயிலை டெல்லி மேம்பாட்டு ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி இடித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மிக முக்கிய கோயிலான ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இதில், போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர், இந்த கோயில் இடிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கின் விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர்கள், தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலை சந்தித்து கோயில் கட்டுவது குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details