புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
காரைக்காலில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Ration shop workers
புதுச்சேரி: காரைக்காலில் அங்கன்வாடி ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் காக்க பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 17) காரைக்கால் அடுத்துள்ள திருமலைராயன் பட்டினத்தில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு அங்கன்வாடி ஊழியர், அங்கன்வாடி உதவியாளர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தினை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.