புதுச்சேரியில் உள்ள 351 ரேஷன் கடைகளில் சுமார் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பல கட்டப் போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று புதுச்சேரி தலைமைச் செயலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரேஷன் கடை ஊழியர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினர்.