தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை செயல்படுத்த விவசாயிகள் மோடிக்கு கடிதம் - அண்மை தேசிய செய்திகள்

டெல்லி: எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை அரசு செயல்படுத்தவேண்டும் என ராஷ்ட்ரிய கிசான் மகாசங் அமைப்பு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

எம்.எஸ். சுவாமிநாதன்  ராஷ்ட்ரிய கிசான் மகாசங்  மந்திரி கிசான் சம்மன் நிதி  Rashtriya Kisan Mahasangh
எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை செயல்படுத்த விவசாயிகள் மோடிக்கு கடிதம்

By

Published : May 7, 2020, 11:34 PM IST

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் விவசாயம், அது சார்ந்த துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலில் இருந்து இதுவரை 9 கோடிக்கும் மேலான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 134 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடும் நெருக்கடிக்கு உள்ளான விவசாயிகள் நிவாரணம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசிடம் கோரி வருகின்றனர். இந்நிலையில் ராஷ்ட்ரிய கிசான் மகாசங் எனும் விவசாயிகளின் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், " இந்தியாவில் விவசாயம், அதனுடன் தொடர்புடைய துறைகளில் 70 விழுக்காடு மக்கள் பணியாற்றுகின்றனர். கார்ப்பரேட்டுகளில் 2.3 விழுக்காடு மக்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். ஆனால், மத்திய அரசு விவசாயத்துறைக்கு வங்கிகள் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது.

ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 22 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது. அரசின் தவறான கொள்கையாலும், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும் விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதர விலையை வழங்கவேண்டும். முழுமையான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details