கரோனா பொதுமுடக்கத்தின் நேர்மறை விளைவுகளில் ஒன்றாக, இயற்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் செழித்துக் காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம், கங்கோத்ரி தேசியப் பூங்காவில் தற்போது பனிச்சிறுத்தைகள் அடிக்கடி தென்பட்டுவருகின்றன.
அரிதான மற்றும் ஆபத்தான காட்டு விலங்குகளில் ஒன்றான பனிச்சிறுத்தை, கடந்த மாதம் முதல் இங்குள்ள கங்கோத்ரி தேசியப் பூங்காவில் பலமுறை தென்பட்டுவருகிறது என விஞ்ஞானி ஷம்பு பிரசாத் நவுதியால் இது குறித்து தெரிவித்துள்ளார்.