தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டில் தூங்கிய சிறுமி பாலியல் வன்புணர்வு! - தூங்கிக் கொண்டிருந்த சிறுமி

ஃபரிதாபாத்தில் எட்டு வயது சிறுமி தனது சகோதரர்களூடன் தூங்கிக் கொண்டிருந்த போது, அண்டை வீட்டாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அண்டை வீட்டார்
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அண்டை வீட்டார்

By

Published : Oct 2, 2020, 3:53 PM IST

டெல்லி: ஃபரிதாபாத்தில் எட்டு வயது சிறுமி தனது சகோதரர்களுடன் தூங்கிக் கொண்டிருந்த போது தனது அண்டை வீட்டாரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் ஃபரிதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறுகையில் “நானும் என் கணவரும் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தோம். என் மூன்று குழந்தைகளும் அறையில் இருந்தனர். அதிகாலை ஒரு மணியளவில், என் மூத்த மகள் இரத்தப்போக்கு ஏற்பட்டு அழுகிறாள் என்று என் இளைய மகள் என்னிடம் வந்து கூறினாள். இதையடுத்து நான் உள்ளே விரைந்து சென்று பார்த்தேன் என்று கூறினார்.

உதவி போலீஸ் கமிஷனர் (ஏ.சி.பி) தர்ணா யாதவ் ”உடனடியாக ஒரு குழுவை அமைத்து, அண்டை வீட்டாராக இருந்த குற்றவாளிகளை அரை மணி நேரத்திற்குள் கைது செய்தோம். அதில் ஒருவர் பிகாரின் பக்ஸரைச் சேர்ந்த திருமணமான நபர்” . என்று கூறினார்.

இதையும் படிங்க: பெங்களூரு போதை பொருள் வழக்கு: ரவடி ராணிக்கு போலீஸ் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details