புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாலாஜி ஸ்ரீவத்சவா செயல்பட்டுவந்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி உள் துறை அமைச்சகம், டெல்லியில் பணியாற்றிவந்த ரன்வீர்சிங் கிருஷ்ணியாவை புதுச்சேரி மாநிலத்தின் புதிய காவல் துறைத் தலைவராக நியமித்து உத்தரவிட்டது.
அதனடிப்படையில், அவர் இன்று புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.