ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்: சிறப்பு அமர்விலிருந்து நீதிபதி விலகல்! - உச்ச நீதிமன்றம்
2019-04-25 15:14:22
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த புகார் குறித்து விசாரிக்க இந்திரா பானர்ஜி, பாப்டே, ரமணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் இருந்து நீதிபதி என்.வி.ரமணா திடீரென விலகியுள்ளார்.