உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் நாளையுடன் (நவம்பர் 17) பணி ஓய்வு பெறவிருக்கிறார். இதனிடையே, அவர் நேற்றுடன் உச்ச நீதிமன்றத்தில் தனது கடைசி பணிநாளை நிறைவு செய்தார்.
அப்போது, காணொலி காட்சி மூலம் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், தாலூகா, கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் சுமார் 15 ஆயிரம் நீதிபதிகளுடன் உரை நிகழ்த்தினார்.
அப்போது, அவர் பேசுகையில், "நீதிபதிகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பணியாற்றிவருவது எனக்குத் தெரியும். இவற்றிற்கு மத்தியில்தான் நீதி வழங்கும் பணியை நாம் செய்துவருகிறோம். எந்தச் சூழலிலும் நமது பணியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது" எனத் தெரிவித்தார்.
ஒரு நேரத்தில் 15 ஆயிரம் நீதிபதிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசியது இதுவே முதல்முறை. பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புடன் சேர்த்து இதுவும் ரஞ்சன் கோகாயின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'உச்ச நீதிமன்றத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது'.. இறுதிப்பணி நாளில் உருகிய கோகாய்