தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்தில் வரைபடம் கிழிப்பு - நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவேசம்! - அயோத்தி வழக்கு விசாரணை

டெல்லி: அயோத்தி வழக்கு இறுதி விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், ராம் ஜென்மபூமியை குறிப்பிடும் வரைபடத்தை கிழித்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ayodhya dispute hearing, அயோத்தி வழக்கு விசாரணை

By

Published : Oct 17, 2019, 5:01 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இஸ்லாமியர் தரப்பு வாதத்தை அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்துக்கள் தங்களின் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அக்.15ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது பாபர் செய்த வரலாற்றுத் தவறு என்று வாதிட்டார். அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த 55 மசூதிகள் இருப்பதாகவும், ராமர் பிறப்பிடம் ஒன்றுதான் என்றும், அதை இந்துக்களால் மாற்ற முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. விசாரணையில், இந்துக்கள் தரப்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமது வாதங்களை நிறைவு செய்ய 45 நிமிடங்களும், இஸ்லாமியர் தரப்பு வழக்கறிஞருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இன்றைய விசாரணையில், அகில இந்திய இந்த மகாசபாவின் வழக்கறிஞர் விகாஸ் சிங் தனது வாதத்தின் போது குணால் கிஷோரின் பிரசுரத்தை ஆதாரமாக வைக்க முயன்றார், அப்போது இஸ்லாமிய வக்வு வாரியம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ராம் ஜென்மபூமியை குறிப்பிடும் வரைபடத்தை திடீரென கிழித்தெறிந்தார். இதனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவேசமடைந்து, இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து வாதங்களையும் முடிக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுபான பாட்டிலில் பசை போன்ற பொருள் - அதிர்ந்த குடிமகன்!

ABOUT THE AUTHOR

...view details