உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். அந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் மீதான பாலியல் புகாரை நான் விசாரிக்கமாட்டேன்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - ரஞ்சன் கோகாய்
டெல்லி: என் மீதான பாலியல் புகாரை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் நான் விசாரிக்கமாட்டேன் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.
Ranjan
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஞ்சன் கோகாய் பேசுகையில், ”பதவிக்காலம் முடியும்வரை பயமின்றி பணியாற்றுவேன். என்னிடமிருந்து பணம் பிடுங்க நினைத்து அது முடியாததால் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
என் மீது கூறியிருக்கும் புகார் அடிப்படை ஆதாரமற்றது. என் மீது குற்றம்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. நீதித்துறையை சீர்குலைக்கவும் சதி நடக்கிறது. இந்த புகாரை நான் விசாரிக்கமாட்டேன். மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள்” என்றார்.
Last Updated : Apr 20, 2019, 3:23 PM IST