தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரவுடிகளுடன் சென்று வாக்கு சேகரிக்கும் ரங்கசாமி - நாராயணசாமி குற்றச்சாட்டு - Rangasamy to go with the voters and collect votes

புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ரவுடிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Oct 11, 2019, 3:01 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக கிருஷ்ணா நகரில் முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "காமராஜ் நகர் தொகுதியின் ஆறு வார்டுகளில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைத்து வாக்கு சேகரித்துவருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் புகார் கூறிவருகின்றனர். கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம்.

வாக்கு சேகரிக்கும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் ரவுடிகள்தான் வாக்கு கேட்கிறார்கள். கொலை ராஜ்ஜியத்தை நடத்தியவர் ரங்கசாமி. அதனை ஒடுக்கி புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை தடுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் உள்ளன. இதனால் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details