தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்திக்கு சம்மன் - ராகுல் காந்திக்கு சம்மன்

ராஞ்சி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Raga
Raga

By

Published : Jan 19, 2020, 9:09 AM IST

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது, மோடியை திருடன் என நீதிமன்றம் குறிப்பிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். நீதிமன்றம் சொல்லாத ஒன்றை சொன்னதாகக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்தத் தலைவர் மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பை ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details