தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் இன்று தொடங்கிய ரம்ஜான் மாதம் - ரம்ஜான் நோன்பு

கேரளாவில் வெள்ளிக்கிழமையான இன்று தொடங்கி ரம்ஜான் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ரம்ஜான் நோன்பு துறத்தல்
ரம்ஜான் நோன்பு துறத்தல்

By

Published : Apr 24, 2020, 6:11 PM IST

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள கப்பாட் கடற்கரையில் பிறை நிலவு நேற்று தென்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தொடங்கி, கேரளாவில் ரம்ஜான் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைகள் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலேயே பிரார்த்தனை செய்யுமாறு இஸ்லாமியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள பாளையம் மசூதி இமாம் சுஹைப், "வீட்டிலேயே நோன்பைக் கடைப்பிடிக்குமாறு இமாம்களும் அறிஞர்களும் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளோம். மனிதர்களின் உயிர் தான் இன்றைய நிலையில் முக்கியம். அப்போதுதான் நம்பிக்கையும் மதமும் நிலைத்திருக்க முடியும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details