உலகப் பெருந்தொற்றான கரோனா இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.
குறிப்பாக திரைத்துறையில் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அதை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் இந்த பிரச்னைய சந்தித்து வரும் தொழிலாளர்களுக்கு ஃபெப்சி அமைப்பு குரல் கொடுத்து பிரபலங்களிடமிருந்து பொரு உதவியும், நிதியுதவியும் பெற்றுவருகின்றனர்.
தெலுங்கு திரையுலகிலும் இந்த பிரச்னையை சந்தித்துவரும் தொழிலாளர்களுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'Corona Crisis Charity' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இனி அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இந்த அமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்யலாம் என கூறியிருந்தார். இவரின் இந்த கோரிக்கையைகளை ஏற்று தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி அளித்து வந்தனர்.