தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இம்முறை வெள்ளத்தால் எங்கள் வீடு மூழ்கவில்லை' ராமோஜி குழுமத்திற்கு நன்றி கூறிய பெண்! - கேரள முதலமைச்சர் பினராயி

ராமோஜி குழுமத்தால் கேரளாவில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் வெள்ள பாதிப்பில் தாங்கி நிற்கும் நிலையில், பயனாளிகள் பலரும் ராமோஜி குழுமத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ramoji-group-sponsored-houses-remain-tough-despite-heavy-flood-in-alappuzha
ramoji-group-sponsored-houses-remain-tough-despite-heavy-flood-in-alappuzha

By

Published : Aug 17, 2020, 7:51 PM IST

2018 செப்டம்பர் மாதத்தில் பெய்த பருவ மழையின்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் கேரளாவின் பல்வேறுப் பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக, ஆலப்புழா பகுதி கடும் பாதிப்பிற்குள்ளானது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனரமைப்புப் பணியில் ராமோஜி குழுமம் ஈடுபட்டது. கேரள அரசின் வீடு புனரமைப்புத் திட்டத்திற்கு அடுத்தபடியாக, இந்தத் திட்டம்தான் இரண்டாவது பெரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ராமோஜி குழுமம் சார்பில், குடும்பஸ்ரீ, "I Am For Alleppey' என்ற பெயரில், 'குடும்பஸ்ரீ' என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு, வீடு கட்டும் பணியை ராமோஜி குழுமம் மேற்கொண்டது. 'ஈநாடு' புனரமைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, இந்த நலத்திட்டத்தை ஆலப்புழா மாவட்டத்தின் சார் ஆட்சியர் கிருஷ்ணா தேஜா தொடர்ச்சியாக மேற்பார்வையிட்டார். 7.7 கோடி ரூபாய் மதிப்பில் 40 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட 121 வீடுகள் அடித்தளத்திலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பயனாளிகளுக்கு வழங்கினார். தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆலப்புழாவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ராமோஜி குழுமத்தால் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கிறது என ஆலப்புழாவின் நெடுமுடி பகுதியைச் சேர்ந்த லதா சங்கரன்குட்டி என்பவர் துணை மாவட்ட ஆட்சிருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், '' சார், இம்முறை எனது வீடு வெள்ளத்தில் மூழ்கவில்லை. நன்றி'' என எழுதப்பட்டுள்ளது. இதே உணர்வுகளை பிரதிபலித்து ஆலப்புழாவில் வசித்துவரும் பலரும், ராமோஜி குழுமத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதாக தெரிவித்துள்ளனர்.

ராமோஜி குழுமத்திற்கு நன்றி கூறிய பெண்

இதனால் இதே போன்ற வீடுகளுக்குள் தண்ணீர் புகாதவாறு வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு சிந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புனே டூ ஹைதராபாத் : ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நுரையீரல்!

ABOUT THE AUTHOR

...view details