குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒன்பது நாள் அரசுமுறைப் பயணமாக தெலங்கானா வந்துள்ளார். சனிக்கிழமை (டிசம்பர் 20) செகந்திராபாத் வந்த ராம்நாத் கோவிந்தை அம்மாநில ஆளுநர் தமிழிசை நேரில் சென்று வரவேற்றார்.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரான ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ஃபிலிம்சிட்டிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகைபுரிந்தார்.
ராமோஜி ஃபிலிம்சிட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "பல மொழிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ராமோஜி ஃபிலிம்சிட்டி ஒரு மினி இந்தியா போலவே நம்மை உணரவைக்கிறது. கலைஞர்களின் கடின உழைப்புக்கும் படைப்பாற்றலுக்கும் ராமோஜி ஃபிலிம்சிட்டி சான்றாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'சில் ப்ரோ' தனுஷ் இப்போ 'முரட்டு தமிழன்டா'!