இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஹைதராபாத் வந்தடைந்தார். பேகம்பேட் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று ரங்கா ரெட்டி மாவட்டத்தில், ஸ்ரீ ராம் சந்திர மிஷனின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு, நிறுவப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய தியான நிலையமான 'கன்ஹா சாந்தி வனம்' என்ற புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.