தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உடலையும் மனதையும் யோகா வலுப்படுத்தும் - பிரதமர் மோடி - கரோனா தொற்று

டேராடூன்: ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு தங்களது வீட்டிலேயே தகுந்த இடைவெளியோடு யோகா செய்யுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

International yoga day
International yoga day

By

Published : Jun 19, 2020, 3:05 PM IST

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் ஆயுஷ் அமைச்சகத்தால் மின்னணு, டிஜிட்டல் தளங்கள் மூலம் பெரிய அளவில் அனுசரிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஹரித்வாரின் ஹர் கி பவுரி என்ற இடத்தில் யோகா குரு ராம்தேவ் 'யோகா ஒத்திகை' நடத்தினார்.

இதுகுறித்து நேற்று (ஜூன் 18) பிரதமர் மோடி கூறுகையில், இந்த ஆறாவது உலக யோகா தினத்தில் மக்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களேடு வீட்டிலேயே அனுசரிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேசமயம் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை நன்கு அறிய யோகா ஒரு நல்ல வாய்ப்பாகும். நமது உடலையும் , மனதையும் வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details