தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"வெளியேவந்து சரண் அடையுங்கள்" - பயங்கரவாதிகளிடம் முழங்கிய பெண் போலீஸ்! - மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் அனிதா சிங்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சரணடைய வலியுறுத்தி மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் அனிதா ஷர்மா பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

anitha sharma

By

Published : Sep 29, 2019, 11:32 AM IST

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பட்டோடே நகருக்குள் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து, காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, தேடப்பட்டுவந்த பயங்கரவாதிகள் ஒரு குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தார். காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

பின்னர், ராம்பன் மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அனிதா ஷர்மா, "மரியாதையாக வெளியே வந்து சரணடையுங்கள்" எனக் கம்பீரமாக பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அனிதா ஷர்மா

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனிதா ஷர்மாவின் துணிச்சலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அனிதா ஷர்மாவின் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து பயங்கரவாதிகள் சரணடைய மறுத்ததால் அவர்கள் காவல் துறையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டனர். இதில், நாயக் ராஜேந்திர சிங் என்ற ராணுவ வீரர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பேருந்தை பிடிக்க முயன்ற பயங்கரவாதிகள்; சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details