இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியிருக்கிறார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையே உள்ளூர் மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
'உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும்..!' - ராமதாஸ் - ramadoss
சென்னை:"உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்" என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு அதிகம். அந்த கோரிக்கையை அப்போதைய மத்திய அரசு தட்டிக் கழித்தது. இதற்கு முன் 348(2) ஆவது பிரிவின்படி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளது.
அம்மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதே உரிமை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய அவர்கள் முன்வராத பட்சத்தில் தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து சாதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என கூறப்பட்டுள்ளது.