நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல ஆன்மிகத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் கட்டப்படவுள்ள இந்த ராமர் கோயிலை 77 வயதான சந்திரகாந்த் சோம்புரா வடிவமைத்துள்ளார். நாகரா பாணியிலான கட்டடக் கலையைப் பின்பற்றி கட்டப்படவுள்ள இக்கோயில், ஐந்து கோபுரங்களை கொண்டிருக்கும்.
உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள உள்ள அனைத்து பழங்கால கோயில்களும் இதே மாதிரியான கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பழையை முறையே இந்தக் கோயிலிற்கும் பின்பற்றப்படும். ராமர் கோயில் கட்ட வெறும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 67 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.