தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பூமி பூஜை மூலம் பால் தாக்கரேயின் கனவு நிறைவேறியுள்ளது - சஞ்சய் ராவத் - ராமர் கோயில் பூமிபூஜை

மும்பை : இந்தியர்களின் தெய்வம் ராமரின் கோயில் பூமி பூஜையால், சிவசேனாவின் நிறுவனர் தலைவர் பால் தாக்கரேயின் கனவு நிறைவேறியதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

பூமி பூஜை மூலமாக பால் தாக்கரேயின் கனவு நிறைவேறியுள்ளது - சஞ்சய் ரவுத்
பூமி பூஜை மூலமாக பால் தாக்கரேயின் கனவு நிறைவேறியுள்ளது - சஞ்சய் ரவுத்

By

Published : Aug 5, 2020, 5:23 PM IST

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், "நெடிய போராட்டத்தின் முடிவாக அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் பூமி பூஜை விழாவுடன், இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி உள்ளது.

சிவ சேனா கட்சி ஆதரவாளர்களால் "இந்துஹிர்தாயசமரத்" (இந்து இதயங்களின் பேரரசர்) என்று அழைக்கப்படுகின்றவரும், ராமர் கோயிலின் வலுவான ஆதரவாளருமான எங்களின் தலைவர் பாலா சாகேப் பால் தாக்கரேயின் கனவானது இதன் மூலமாக இன்று நிறைவேற்றி இருக்கிறது.

ஸ்ரீ ராம், கார்வ் சே கஹோ ஹம் இந்து ஹை (நாங்கள் இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லுங்கள்)" என அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details