அயோத்தி:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜைகள் புதன்கிழமை (ஆக5) தொடங்குகின்றன. இந்தப் பூமி பூஜைக்கு முந்தைய சடங்குகள் கவுரி கணேஷ் பூஜையுடன் இன்று (ஆக.3) தொடங்கின.
இந்தப் பூஜைகள் காலை 8.30 மணிக்கு 11 பூசாரிகளால் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கப்பட்டன. அப்போது ராமாயாண காட்சிகளும் நடைபெற்றன.
இது குறித்து சாமியார் மகாந்த் சத்யேந்திரா கூறுகையில், "அயோத்தியில் இன்று ராமர் எழுந்தருளியிருக்கிறார். இந்தப் புனித நகரத்தில் மணிகளின் சப்தத்துக்கு மத்தியில் வேதமந்திரங்கள் முழக்கமிடுகின்றன.