நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நாளில்தான், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. நூற்றாண்டு கால பிரச்னைக்கு முடிவு காணப்பட்டதாக நம்பப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜை
500 ஆண்டு கால சச்சரவு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்படும் என நம்பப்படுகிறது. இந்த விவகாரத்தால் நாட்டில் பல வன்முறைகள், பிளவு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.
வேத முறையின் படி, மதம் சார்ந்த சடங்கு நடத்துவதற்கான தேதியும், நேரமும் தீர்மானிக்கப்பட்ட போதிலும், ஆகஸ்ட் 5ஆம் தேதியை பாஜக தேர்வு செய்வதற்கு வேறு சில முக்கிய நிகழ்வுகளும், காரணங்களும் உண்டு.
அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கம்