தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இன்னும் மூன்றாண்டுகளில் ராமர் கோயில் தயார்' - ராம் மந்திர் அறக்கட்டளை - ராமர் கோயில் அறக்கட்டளை

லக்னோ: அயோத்தியில் வரும் ஏப்ரல் மாதம் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, மூன்றாண்டுகளில் நிறைவடையும் என ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Ram Mandir
Ram Mandir

By

Published : Feb 20, 2020, 10:24 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம் ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுமானம் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அறக்கடளையின் அறங்காவலரான மூத்த வழக்கறிஞர் பராசரன் தலைமையேற்று நடத்தினார்.

கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த பராசரன், ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்றும் மூன்றாண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும் தெரிவித்தார்.

ராம் ஜென்ம பூமி இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் சட்டத்துறைக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், ராம் ஜென்ம பூமி நியாஸ் அமைப்பைச் சேர்ந்த நிரித்தய கோபால் தாஸ் அறக்கட்டளை தலைவராகவும், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி சம்பத் ராய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளராகவும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'இந்தியாவை அவானப்படுத்திய ட்ரம்ப்' - பொங்கும் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details