பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும்போது, 50 ஆண்டுகளுக்கும் மேலான, மிகவும் சிக்கலான மற்றும் வன்முறை இனவாத பிரச்னைகளுக்கும் முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் கட்டுவது என்பது எப்போதுமே சங் பரிவாரின் மனதில் மிக நெருக்கமாக இருக்கும். இது சமீபத்திய அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் முக்கியமாக காணப்பட்டது. இருப்பினும், அவர்கள் அந்த நோக்கத்தை எவ்வாறு அடைவது என்பது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருந்தனர். பெரும்பாலான முயற்சிகள் பேச்சுவார்த்தைகளாகவே இருந்தன. அவற்றில் ஒரு டஜன் கூட்டங்கள் இடைக்காலத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் முடிவுற்றது.
இறுதித் தீர்ப்பிற்கான களத்தை அமைப்பதற்கு இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட மோடி முடிவு செய்தார். தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பல ஆண்டுகளாக முடிக்க முடியாத வழக்கை ஒருமனதாக முடிவு செய்ய 40 நாட்கள் ஆனது.
1980களின் முற்பகுதியில், ராமர் கோயில் / பாபர் மசூதி பிரச்னையை இந்துத்துவா அடிப்படையாக சங் பரிவார் தேர்ந்தெடுத்தது. விஸ்வ இந்து பரிஷத் (VHP) 1984 ஜனவரியில், அயோத்தியில் சரயு ஆற்றின் கரையில் சங் பரிவார் அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் திறந்து விடு திறந்து விடு, ஜன்மபூமியை திறந்து விடுஎன்று முழக்கமிடப்பட்டது.
இந்த வி.எச்.பி கிளர்ச்சியினால் பாஜக பயனடைந்தது. பிப்ரவரி 1986இல் பைசாபாத் நீதிமன்ற உத்தரவின்பேரில் ராம் ஜன்மபூமி திறக்கப்பட்டதும், இந்துக்களுக்கு பிரார்த்தனை செய்யும் உரிமையை வி.எச்.பியின் கிளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. ஆகஸ்ட் 1989-ல், ராம் ஜன்மபூமி / பாப்ரி மசூதி வழக்கில் யாருக்கு உரிமை என்ற முக்கியமான வழக்கு விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் மேற்கொண்டது.
இந்த வழக்கின் வரலாற்றில் 1989 நவம்பரில் பொதுத் தேர்தல்களுக்கு சற்று முன்னர் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசாங்கம் சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் பூஜை செய்ய வி.எச்.பி.க்கு அனுமதி வழங்கியது. வி.எச்.பி கோயில் பிரச்னையை வைத்து ஒரு பீதியை உருவாக்கத் தொடங்கியது. நவம்பர் 1990இல், அரசாங்கத் தடையை மீறி லட்சக்கணக்கான சங் பரிவார் ஆர்வலர்கள் அயோத்திக்கு வந்தனர். அவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தை நோக்கி ஊர்வலமாக செல்லத் தொடங்கியபோது, முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், ஊர்வலம் வந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். அந்த துப்பாக்கிச் சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த ஆதாயங்கள் குறிப்பிடத்தக்கவை, அந்த தேர்தலில் அது 45 இடங்களை வென்றது, ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 57 இடங்களிலிருந்து 193 இடங்களைப் பெற்றது.