உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராமர் ஜென்ம பூமி கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை தீவிரமாக செய்துவருகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவிற்கான சுப முகூர்த்த நேரத்தை கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர் சாவந்த் என்.ஆர் விஜயேந்திர சர்மா கணித்து தந்துள்ளார்.
முன்னாள் பிரதமர்களான மொரார்ஜி தேசாய், பி.வி. நரசிம்மராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற இந்தியாவின் பல அரசியல் தலைவர்களின் பதவியேற்பு விழாக்களுக்கு நல்ல நேரத்தை கணித்து தந்தவர் சர்மா என்பது கவனிக்கத்தக்கது. பெலகாவியில் உள்ள ராகவேந்திரர் கோயிலின் நவபிருந்தாவனத்தில் வசித்துவருகிற சாவந்த் விஜயேந்திர சர்மா, நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் விழா குறித்து பேசிய அவர், "அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக ஜூலை 29, ஜூலை 31, ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகியவை நான்கு சுப முகூர்த்த நாள்களை நான் தேர்வு செய்து தந்தேன். அவற்றில் மிகச் சிறந்த நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதியை பூமி பூஜைக்கு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. ஸ்ரீராம் ஜென்ம பூமியின் நம்பிக்கைக்குரிய புனேவைச் சேர்ந்த கோவிந்த் தேவகிரி மகாராஜின் வேண்டுகோளை ஏற்று நான்கு முகூர்த்த நாள்களை கணித்து கொடுத்துள்ளேன்.