தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவருக்குக் கரோனா - மகந்த் கோபால் தாஸ்

லக்னோ: அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

trust chief
trust chief

By

Published : Aug 13, 2020, 4:00 PM IST

Updated : Aug 13, 2020, 8:09 PM IST

அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களுக்குத் தனியாக மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கிய மத்திய அரசு, கோயில் கட்டும் பணியை ஒப்படைத்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிச் செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவின் போது, ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை நடக்கும் மேடையில் பிரதமர் மோடியுடன் ஆதித்யநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், முச்சு திணறல் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் கேட்டறிந்தார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேதாந்தா மருத்துவமனை மருத்துவர் ட்ரெஹான் கூறுகையில், 'ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி விழாவின் கொண்டாட்டங்களுக்காக தாஸ் செவ்வாய்க்கிழமை மதுரா வந்தார். அதன் பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. கோபால் மதுராவின் சீதாராம் மந்தீரில் நான்கு நாள்கள் தங்கியிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்த தகவல் வெளிவந்தவுடன், மருத்துவர்கள் குழு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க விரைந்தது. அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களின் சிறப்புக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது' என்றார்.

அயோத்தியில் முக்கிய நபரான மகந்த் நிருத்ய கோபால் தாஸுக்கு, அங்குப் பல முக்கியமான கோயில்களைக் கட்டிய பெருமையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 13, 2020, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details