புதுச்சேரியில் பஞ்சாலைகளை நவீனப்படுத்தி உரிய நிதி ஒதுக்க வேண்டும், 9,000 அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சட்டப்பேரவை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.
அதன் சங்கத் தலைவர் ஆனந்த் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து பேரணி தொடங்கி சட்டப்பேரவை அருகே பேரணி நிறைவு பெற்றது. இதில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.