சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவிதா கௌஷல். இவர் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவருகிறார். காவலராக பணியாற்றிய இவரது சகோதரர் ராகேஷ் கௌஷல், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
துப்பாக்கிக்கு ராக்கி கட்டிய லேடி கான்ஸ்டபிள்! - Kerala floods
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அலுவலர் கவிதா, தன் அண்ணன் துப்பாக்கிக்கு ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிக்கு ராக்கி கட்டிய சகோதரி!
ராகேஷ் கௌஷல் பயன்படுத்திய துப்பாக்கியைதான் கவிதாவும் பயன்படுத்திவருகிறார். இந்நிலையில், ரக்ஷாபந்தனன்று தன் அண்ணன் பயன்படுத்திய துப்பாக்கிக்கு அவர் ராக்கி கட்டி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்து கவிதா கூறுகையில், "என் சகோதரர் இறந்ததால், அவரின் பணி எனக்கு வழங்கப்பட்டது. நக்சலைட்டுகள் கோழைத்தனமாக என் அண்ணனை கொலை செய்தனர். அவர்களை பழிவாங்காமல் ஓயமாட்டேன்" என்றார்.