மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் மாதத்துடன் காலியாகவுள்ள 55 இடங்களுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் உள்பட 37 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 18 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுரை 492 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 பேருக்கு சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை