நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 7ஆம் நாள் இன்று நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.
இன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு மாநில கட்சிகளின் எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.