தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை: மசோதா நிறைவேற்றம் - Healthcare Workers

டெல்லி: சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

rajya-sabha-passes-bill-to-punish-those-attacking-healthcare-workers
rajya-sabha-passes-bill-to-punish-those-attacking-healthcare-workers

By

Published : Sep 19, 2020, 10:34 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 6ஆவது நாள் இன்று நடைபெற்றது. அதில் தொற்று நோய்க்கான திருத்த மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தாக்கல்செய்தார்.

இந்தத் சட்டத்திருத்தத்தின் மூலம் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதுடன், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது. அதேபோல் சுகாதாரப் பணியாளர்களை அவமதித்தாலோ அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து மசோதா மீது நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்!

ABOUT THE AUTHOR

...view details