நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எட்டாவது நாளாக நடந்து வருகிறது. இந்த நடந்த மாநிலங்களவைக் கூட்டத்தின் பூஜ்ய நேரத்தின் போது, கேரள சிபிஐ உறுப்பினர் பினோய் விசம் பேசினார். அதில், '' கரோனா வைரசால் இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 பேர் வரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டு மக்களில் பலரும் முகக்கவசங்கள் வாங்க முடியாத நிலையில்தான் இருக்கின்றனர். அதனால் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.