பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் கூட்டுறவு நாடுகள் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் பங்கேற்று பல்வேறு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், சீனாவின் பாதுகாப்பு அமைச்சருடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோவில் இந்தக்கூட்டம் முடிவடைந்த நிலையில், இந்தியா திரும்புவதாக இருந்த ராஜ்நாத் சிங் திடீர் முடிவாக ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். ஈரான் சென்று, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமர் ஹடாமியை சந்தித்து பேசவுள்ளதாக இந்தப் பயணம் குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.