தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் மகனுக்கு கரோனா! - பங்கஜ் சிங்குக்கு கரோனா பாதிப்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகனும், கெளதம் புத்தா நகர் எம்எல்ஏ-வுமான பங்கஜ் சிங், கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Rajnath Singh's son tests COVID-19 positive
பாஜக எம்எல்ஏ பங்கஜ் சிங்

By

Published : Sep 2, 2020, 12:06 PM IST

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகனும், கெளதம் புத்தா நகர் எம்எல்ஏ-வுமான பங்கஜ் சிங், கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், அதற்கான பரிசோனையை மேற்கொண்ட பங்கஜ் சிங், பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியது. இதனை பங்கஜ் சிங், தனது ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டரில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்து சில நாள்கள் என்னிடம் தொடர்பில் இருந்த அனைவரும் தாமாக முன் வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பங்கஜ் சிங்குக்கு, தற்போது கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என்பதும், முன்னதாக அம்மாநிலத்தில் பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடந்த 24 மணி நேரத்தில் 5 மாநிலங்களில் அதிகபட்சமாக கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details