தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிழக்கு லடாக்கில் வீரர்களை சந்திக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர்! - இந்தியா - சீனா எல்லை மோதல்

டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாதுகாப்புப் படை வீர்ரகளை வரும் ஜூலை 17ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

rajnath
rajnath

By

Published : Jul 16, 2020, 12:00 AM IST

இந்தியா- சீனா எல்லையில் மோதல் நடைபெற்ற பகுதியைப் பார்வையிட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் ஜூலை 17ஆம் தேதி வரவுள்ளார். டெல்லியிலிருந்து லே பகுதிக்கு செல்லும் அமைச்சர், சீன தாக்குதலில் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீரர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

பின்னர், எல்லையில் பாதுகாப்பு பணியிலிருக்கு வீரர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார். இச்சந்திப்பின் போது ராணுவத் தலைமை தளபதி முகுந்த் நரவனேவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை 3ஆம் தேதியே ராஜ்நாத் சிங் லே பகுதிக்கு வர திட்டமிட்டிருந்த நிலையில், பிரதமரின் திடீர் வருகையால் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நேற்று (ஜூலை 14) இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் கிழக்கு லடாக்கின் எல்லைகளில் சுமார் 15 மணி நேரம் சந்தித்து உரையாடியுள்ளார்கள்.

அச்சந்திப்பின் போது எல்லையில் வீரர்கள், பொருட்களை அகற்றுவது குறித்தும், விரிவுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை இருநாட்டின் ராணுவ பிரதிநிதிகளும் நான்கு முறை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details